சட்டமன்றம் விதண்டாவாதத்துக்கு உரிய இடமாக மாறிவிட்டது: தமிழிசை சவுந்தரராஜன்

புதன், 24 ஆகஸ்ட் 2016 (17:00 IST)
சட்டமன்றம் விதண்டாவாதத்துக்கு உரிய இடமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 


இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் பாஜக மையக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
 
தற்போது தமிழக சட்டமன்றம் செயல்படும் விதம் ஆரோக்கியமானதாக இல்லை. சட்டமன்றம் விதண்டாவாதத்துக்கு உரிய இடமாக மாறி வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது.
 
எதிர்க்கட்சித் தலைவர்களை பேச அனுமதிக்க வேண்டும். அனுபவசாலியான திமுக தலைவர் கலைஞர் சட்டமன்றத்துக்கு சென்று தங்கள் கட்சியினருக்கு வழிகாட்டுவது மட்டுமின்றி மக்களுக்கான சேவையை ஆவர் செய்ய வேண்டும்.
 
முதல் அமைச்சரின் சவாலுக்காக அல்லாமல் தனது கடமைக்காக கலைஞர் சட்டமன்றம் செல்ல வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்