சுற்றுலா நட்பு ஆட்டோக்கள் அறிமுகம்

புதன், 3 ஜூன் 2009 (11:42 IST)
இன்னும் சில நாட்களில் சென்னை சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், விமான நிலையம் போன்ற இடங்களில் சுற்றுலா நட்பு வாகனம் என்ற ஆட்டோக்கள் வலம் வருவதைப் பார்ப்பீர்கள்.

இது என்ன சுற்றுலா நட்பு ஆட்டோ என்று நீங்கள் அப்போது யோசிக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் அது பற்றி முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

அதாவது, தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது தான் இந்த சுற்றுலா நட்பு வாகனங்கள். ஆனால், இவை வெளிநாட்டு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும்தான் என்று நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.

உள்ளூர்வாசிகளும், எங்கு வேண்டுமானாலும் இந்த ஆட்டோக்களில் செல்லலாம்.

இந்த ஆட்டோக்கள் சுற்றுலாவிற்கு செல்லும் பயணிகளுக்காசிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது.

சுற்றுலா இடங்களுக்கு மட்டுமல்லாமல் எப்பொழுதும், எங்கேயும் செல்லலாம், சரியான கட்டணம் (மீட்டர் முறை), கனிவான சேவை, பயணம் சுகமான அனுபவம் என்ற வேதங்களுடன் துவங்கியுள்ளது இந்த சிறப்பு சேவை.

இந்த ஆட்டோ சேவையைப் பெற சுற்றுலா மைய தொலைபேசி எண்கள் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - 25353351, எழும்பூர் - 28192165, விமான நிலையம் - 22560437/0569, கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் 24791888, சுற்றுலா அலுவலகம் 25368358.

வெப்துனியாவைப் படிக்கவும்