புயல்வேக ரயில் கட்டணம் ரூ.760 ஆக நிர்ணயம்

வியாழன், 17 செப்டம்பர் 2009 (10:45 IST)
சென்னை-நிஜாமுதின் இடையே இய‌க்க‌ப்பட உ‌ள்ள புயல்வே ரயி‌லி‌ல் பய‌ணி‌ப்பத‌ற்கான கட்டணம் ரூ.760 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இ‌ந்த க‌ட்டண‌ம் சாப்பாடுடன் கூடிய இரண்டாம் வகுப்பு படுக்கை கட்டணமாகு‌ம். செ‌ன்னை‌- ‌நிஜா‌மு‌தீ‌ன் இடையே 28 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இ‌ந்த புய‌ல்வேக ர‌யி‌ல் பய‌ணி‌க்‌கிறது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

புதுமையான வடிவ‌த்‌தி‌ல், எவர்சில்வர் பெட்டிகளுடன் தனி வண்ணத்தில் உருவாக்கப்பட்டு உள்ள சென்னை-நிஜாமுதின் புயல்வேக ரயில் நேற்று முன்தினம் பேசின்பிரிட்‌ஜி‌ல் இருந்து சென்டிரல் ரயில் நிலையம் வரை வெள்ளோட்டம் விடப்பட்டது. தொடக்கத்தில், இந்த ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் காலை 6.40 மணிக்கு புறப்படு‌ம் இ‌ந்த ர‌யி‌ல், மறுநாள் காலை 10.35 மணிக்கு நிஜாமுதின் சென்றடையும். செ‌ன்னை - ‌நிஜாமு‌தீ‌ன் இடையேயான தூரம் 2,176 கிலோமீட்டரை, இ‌ந்த ர‌யி‌ல் 27 மணி நேரம் 55 நிமிடங்க‌ளி‌ல் கட‌க்‌கிறது.

சென்னை-நிஜாமுதின் புயல்வேக ரயிலுக்கான (எண்:2259) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் சாப்பாடு செலவும் அடங்கும். அதாவது, காலையில் பயணிகளை வரவேற்கும் வகையில் காபி வழங்கப்படுகிறது. அதையடுத்து காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலையில் காபி, இரவு டிபன், மறுநாள் காலையில் காபியுடன் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த ரயிலில் நான்கு விதமான வகுப்புகள் உள்ளன.

இரண்டாம் வகுப்பு படுக்கை கட்டணம் ரூ.760, இரண்டடுக்கு ஏ.சி.பெட்டி கட்டணம் ரூ.2,530. மூன்றடுக்கு ஏ.சி.பெட்டி கட்டணம் ரூ.1,925, முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் மூன்றடுக்கு ஏ.சி.பெட்டி எகானமி கட்டணம் 1,805. ஒவ்வொரு வகுப்பு கட்டணத்திற்கும் ஏற்றவாறு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவு டிபன் ஆகியவை வழங்க‌ப்படும் என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு இடையே எந்த இடத்திலும் நிற்காமல் செல்லும் புயல்வேக ரயில்கள் (டோரண்டோ ரயில்) இயக்கப்படும் என்று பட்ஜெட்டில் ரயில்வே அமை‌ச்ச‌ரமம்தா பானர்ஜி அறிவித்தார். அதன்படி, இந்திய ரயில்வே முதல்முறையாக புயல்வேக ரயில்களை இயக்க உள்ளது. முதல் புயல்வேக ரயிலை மேற்கு வங்காள மாநிலம் செல்டா ரயில் நிலையத்தில் நாளை (18-ந் தேதி) நடைபெறும் விழாவில் செல்டா-புதுடெல்லி புயல்வேக ரயிலை மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார்.

செ‌ன்னை - ‌நிஜாமு‌தீ‌ன் புய‌ல்வேக ர‌யிலை ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌ ‌சித‌ம்பர‌ம் துவ‌‌ங்‌கி வை‌க்க உ‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்