(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) - கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் புதன், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
வெள்ளை மனதுடன் அனைவரிடமும் பழகும் ரிஷபராசியினரே இந்த மாதம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.
கார்த்திகை:
இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 28, 29