வரலட்சுமி நோன்பு விரதம் இருக்கும் முறைகளும் பலன்களும்...!!

கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

உள்ளத் தூய்மையுடனும், உடல் தூய்மையுடனும் அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த  விரதத்தை அனுஷ்டிப்பதனால், இல்லத்தில் செல்வம் செழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும்  பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் 'பாக்கிய லட்சுமியின்' அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த  விரதத்தை சுமங்கலி பெண்கள் எல்லோரும் விரும்பி அனுஷ்டிக்கின்றனர்.
 
வரலட்சுமி என்பது வரன் தரும் லட்சுமி, வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது. அந்த லட்சுமி நோன்பு விரதம் இருக்கும்  போது எதை நாம் கேட்டாலும் கிடைக்கும். அது சத்புத்திரன், அதாவது சந்தான பாக்கியம். ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டாலும் சரி, அல்லது வீடு  வேண்டும் என்று கேட்டாலும் சரி.
 
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வாரிசு பெறுவதோடு, அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள். விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றை சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். 
 
எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி.  மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன,  ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்