கொஞ்சம் சிரிங்க பாஸ்!

புதன், 10 ஆகஸ்ட் 2016 (15:53 IST)
தீவிர நாத்திகர் ஒருவர் தன் மகனுக்கு வைத்த பெயர் "கடவுள் இல்லை"
பள்ளியில் தமிழ் ஆசிரியர் வருகைப்பதிவேடு பதிவிற்காக அவன் பெயர் சொல்லி அழைக்கும் போது லேசான சிரிப்பலை வந்து போகும்..
ஆசிரியர்: "கடவுள் இல்லை"
மாணவன்: "உள்ளேன் ஐயா”
 
-ஸ்ரீ தமிழ்செல்வன்
------------------------------------------------------------------

நோயாளி : டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்...!
மருத்துவர் : அப்படியா..? சும்மாவா இருந்தீங்க....?
நோயாளி : இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்...!
 
-கமல் மதுரை
------------------------------------------------------------------
 
நண்பர் 1 : நேத்து உன் மனைவிக்கும் உன் அம்மாவுக்கும் நடந்த சன்டைல" 
நண்பர் 2 : யாருக்கு பின்னாடி நீ நின்ன..?
நண்பர் 1 : போடா... நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
 
-கமல் மதுரை
------------------------------------------------------------------
 
ஒருவர் : சார்...ஆறு வருடத்தில் டெபாசிட் பணம் டபுல் ஆகும்னு சொன்னீங்களே....என்ன ஆச்சு
அதிகாரி : டபுல் ஆகும்னு தான் சொன்னோம் திரும்பத் தர்றதா சொல்லலேயே.
ஒருவர் : ?????
 
-கமல் மதுரை
------------------------------------------------------------------
 
தொண்டர் : தலைவரே நீங்க..இப்ப சொன்னது நூத்துக்கு 120% உண்மை.!
தலைவர் : சரியான ஜால்ராய்யா நீ.. நான் ஒன்னுமே சொல்லலே கொட்டாவி தான் விட்டேன்.

-கமல் மதுரை
------------------------------------------------------------------

வாசகர் : ஏன் சார், ஜோக் எழுதுறேனு சொல்றீங்க ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலேயே...?
எழுத்தாளர் : பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதே என்று என் தாத்தாவும் பாட்டியும் அடிக்கடி சொல்வாங்க அதான்!.
 
-கமல் மதுரை

வெப்துனியாவைப் படிக்கவும்