ஜெயம் ரவி நடித்துள்ள 'வன மகன்' படத்தின் டிரைலர்!

வியாழன், 30 மார்ச் 2017 (10:17 IST)
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'வன மகன்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி பழங்குடியின இளைஞராக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக  சாயிஷா சைகல் நடித்திருக்கிறார்.


 
 
இப்படத்தின் கதை காடுகள் பின்னணியில் உருவாகும் என ஏற்கனவே கூறப்பட்டது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக சாயீஷா  சாய்கல் நடிக்கிறார், மேலும், தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். போகன் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.
 
வனமகன் படத்தில் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் நேற்று வனமகன் படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்