அவன் பேரன் இல்ல குபேரன்... ஆலம்பனா பட அசத்தலான டீசர் இதோ!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (18:40 IST)
நடிகர் வைபவ் கோதவா என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அதையடுத்து கடந்த 2008ம் ஆண்டில் வெளியான சரோசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் நடிகரானார். தொடர்ந்து கோவா, ஈசன், மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார். 
 
மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்து படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக அவர் நடித்த மலேசியா அம்னீசியா என்ற திரைப்படம்  ஜி5 OTT தளத்தில் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது  இயக்குனர் பரி.கே.விஜய் இயக்கி வரும் ஆலம்பனா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி படம் குறித்து ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்