விஜய் மற்றும் அட்லியின் கூட்டனியில் மூன்றாவது படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப்படம் விஜய் 63 என அழைக்கப்பட்டு வருகிறத்ய். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னை மீனம்பாக்க்த்தில் நடைபெற்று வருகிறது.
படத்திற்காக மீனம்பாக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக செட் ஒன்று போடப்பட்டு இருந்தது. அந்த செட்டில் ஏற்பட்ட மின்கசிவுக் காரணமாக நேற்று தீ விபத்தி ஏற்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் காய்ந்த சருகுகள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மதிப்புள்ள செட்டும் படப்பிடிப்பு வாகனங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன.