நயன்தாராவின் O2
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நேரடியாக நேற்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய படங்களுக்கு பிறகு நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் மூன்றாவது படமாக வெளியானது.
எப்படி இருக்கு?
விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் இருப்பவர்கள் பறிக்க நினைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “O2”. இந்த செண்டிமெண்ட் கதைக்களத்தோடு பேருந்தில் போதை மருந்து கடத்தும் கும்பல், மற்றும் சிறையில் இருந்து விடுதலை ஆகி தன் அம்மாவை சந்திக்க செல்லும் நபர் என சுவாரஸ்யமான சில கிளைக்கதைகளைக் கொண்டிருக்கும் திரைப்படம் ஆரம்ப காட்சிகளில் வெகுவாகக் கவர்கிறது. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பின் காட்சிகளின் சுவாரஸ்யம் குறைந்து அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பே இல்லாமல் செல்கிறது. படத்தின் சில விஷயங்கள் இதே போன்ற கதைக்களத்தில் ஏற்கனவே வெளியான எங்கேயும் எப்போதும் படத்தை ஞாபகப் படுத்துகின்றன. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் தூண்களாக செயல்பட்டு காப்பாற்றுகின்றன.