யோகிபாபு- ஓவியா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பிரபல நடிகர் !

புதன், 22 செப்டம்பர் 2021 (22:31 IST)
நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ள புதிய படத்தை அன்கா மீடியா தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மதயானை, களவாணி, உள்ளிட்ட படங்களில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியா நடிக்கவுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தின் பூஜை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதுகுறித்து நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை ஓவியா, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் பார்த்திபன் நாளை மாலை 6;30 மணிக்கு வெளியிடுகிறார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மகான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ்!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்