‘என்னை அறிந்தால்’ படத்தின் 7வது வருட கொண்டாட்டம்: அருண்விஜய் மகிழ்ச்சி
சனி, 5 பிப்ரவரி 2022 (18:24 IST)
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து ஏழு வருட கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கிய என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸானது
இந்த படம் ரிலீஸ் ஆகி 7 ஆண்டுகள் முடிவு பெற்றதை அடுத்து இன்று சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது
இந்த கொண்டாட்டத்தின் கவுதம் மேனன், அருண்விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தில் கௌதம் மேனன் கேக் வெட்டுவது உள்பட பல புகைப்படங்களை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்
என்னை அறிந்தால் படம்தான் அருண் விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது