யாமி கௌதமுக்கு கௌதம் படம் என்றால் ஓகேவாம்!!

புதன், 25 ஜனவரி 2017 (17:03 IST)
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்தவர் யாமி கௌதம். இந்தியில் பிக் ஷாட். ஹிர்த்திக் ரோஷனுடன் காபில் படத்திலும் நடித்துள்ளார். இனி தமிழில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.


 
 
கௌதம் வாசுதேவ மேனன் எனக்காக ஸ்கிரிப்ட் தயார் செய்து அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
 
அதேபோல் மணிரத்னம் அழைத்தாலும் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். காரணம் சிம்பிள். யாமி மணிரத்னம் படங்கள் பார்த்து வளர்ந்தவராம்.
 
(ஏன் ஷங்கர், ரஜினி எல்லாம் கூப்பிட்டா நடிக்க மாட்டாரா?)

வெப்துனியாவைப் படிக்கவும்