கன்னடத்தில் ரீமேக்காகும் யாமிருக்க பயமே

வியாழன், 16 அக்டோபர் 2014 (12:32 IST)
தமிழில் இந்த வருடம் வெற்றி பெற்ற சொற்ப படங்களில் ஒன்று யாமிருக்க பயமே. த கொயட் ஃபேமிலி என்ற கொரிய படத்தின் தழுவலான இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் தயாரித்திருந்தது.
எந்த மொழியிலும் ஓடக்கூடிய சர்வதேச சப்ஜெக்ட் என்பதால் முதலில் கன்னட மொழியில் படத்தை ரீமேக் செய்கின்றனர். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்டே இந்த ரீமேக்கையும் தயாரிக்கிறது. நமோ பூத ஆத்மா என்று பெயர் வைத்துள்ளனர்.
 
படத்தை யார் இயக்குகிறார், நடிகர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தமிழில் ரூபா மஞ்சரி நடித்த நாயகி வேடத்தில் ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிற விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்