’’அரசியலுக்கு வருவீர்களா??’ நடிகர் சிவகார்த்திகேயன் பதில்

சனி, 20 பிப்ரவரி 2021 (22:49 IST)
தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக  முதல் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், யோகிபாபு,ஐஸ்வர்ய ராஜேஷ்,. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உள்ளிட்ட 134 பேருக்கு முதல்வர் பழனிசாமி கலைமாமணி விருதை வழங்கினார்.

இவ்விருது வழங்கும் விழாவை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இத்தருணத்தில் எனது அப்பா மற்றும் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விருதை வழங்கி இன்னும் நிறைய விசயங்கள் செய்யவேண்டுமென ஊக்குவிக்கும் தமிழக அரசுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

அரசியலுக்கு வருவீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், என்னிடம் இந்தக் கேள்வி கேட்பது ஆச்சர்யமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்