நடிகர் சிம்பு இப்போது மாநாடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளில் நீராடும் சூரியன். இந்த படத்தில்தான் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ளார். இதற்கான வேலைகளை இப்போது படக்குழு ஆரம்பித்துள்ளதாம். இந்த படத்தில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் பணியாற்றிய சிம்பு, திரிஷா, கௌதம் மேனன், ரஹ்மான் மற்றும் ராஜீவன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.
அதனால் செண்ட்டிமெண்ட்டாக திரிஷாவும் இருந்தால் விண்ணைத்தாண்டி வருவாயா கூட்டணி அப்படியே இருக்கும் என்பதாலும், வியாபாரத்துக்கு உதவும் என்பதாலும், திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.