ஒரே படத்தில் விஜய்-சிம்பு-ஏ.ஆர்.முருகதாஸ்?

ஞாயிறு, 26 மார்ச் 2017 (07:31 IST)
இளையதளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 61' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



 


இந்த நிலையில் விஜய்-முருகதாஸ் இணையும் படத்திற்கு சிம்பு இசையமைக்கவுள்ளதாக ஒரு செய்தி நேற்று மாலை முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள் இந்த செய்தியை மிக வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து முருகதாஸ் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். விஜய் படத்தை இயக்குவது குறித்த அதிகாரபூர்வமான செய்தி வெளியாகும்போது அந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், சிம்புவை இசையமைக்க தாங்கள் அணுகவில்லை என்றும் கூறியுள்ளனர்.

விஜய், சிம்பு, முருகதாஸ் ஒரே படத்தில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்