சார்லஸ் ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தை எம்கே. சுபாகரன் தயாரித்திருக்கிறார். கதை, ஹிட்லர் காலத்தில் அவர் ஒரு வைரசை கண்டுபிடிக்கிறார். அந்த வைரஸ் மக்களை எப்படி பாதித்தது, பிறகு ஏன் அவர் அந்த வைரஸை தடை செய்தார் என்ற நிகழ்வு ஒரு புறம் இருக்க, தற்போதைய காலத்தில் உள்ள ஒரு விஞ்ஞானி அதே வைரஸை கண்டுபிடித்து மீண்டும் ஒரு பயோ வாரை நடத்துவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த வைரசால் ஒரு பெண் பாதிக்கபடுகிறார். அவரின் தந்தை ஒரு சைன்டிஸ்ட் என்பதனால் அவருக்கு இந்த வைரஸை பற்றிய தகவல்கள் தெரிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தன் மகளை தனிமை படுத்தி பார்த்துக்கொள்கிறார். ஆனாலும், இந்த பயோ வாருக்கான காரண கர்த்தாவாக யார் இருக்கிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை.