பலூனை பறக்கவிட ஜெய்-அஞ்சலியின் செட்டப் காதல்

புதன், 29 மார்ச் 2017 (22:59 IST)
'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பலூன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இணையதளங்களில் ஜெய்-அஞ்சலி திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாக வதந்தி கிளம்பி வருகிறது.



 


தன் சம்பந்தப்பட்ட வதந்திகளை உடனுக்குடன் மறுக்கும் வழக்கம் உடைய அஞ்சலி, இந்த வதந்திக்கு மட்டும் மெளனமாக இருக்கின்றார். உண்மையில் அஞ்சலி தற்போது ஆறு படங்கள் கைவசம் வைத்துள்ளதால் 2018வரை அவர் திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில் இந்த வதந்தி குறித்து அஞ்சலி எதுவும் சொல்லாமல் இருப்பது 'பலூன் ' படத்தை புரமோஷன் செய்யவே என்று கூறப்படுகிறது. 'ராஜா ராணி' படத்தின்போது ஆர்யாவுடன் திருமணம் என்ற வதந்திக்கு நயன் எப்படி ஒத்துழைப்பு கொடுத்தாரா, அதேபோல் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் அஞ்சலியும் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறப்படுகிறது.

அதையும் மீறி  அஜித்&ஷாலினி, சூர்யா&ஜோதிகா, பிரசன்னா&சினேகா போன்ற ஒரு நட்சத்திர ஜோடியாக ஜெய்&அஞ்சலி ஜோடி உருவானால் மனமார வாழ்த்துவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்