பாஜக தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற பிரயத்தனம் செய்து வருகிறது. இந்த தேர்தலில் 20 சீட்டுகளை பெற்றுள்ள பாஜக இன்னும் 3 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதில் ஒரு தொகுதியான விளவங்காட்டில் நடிகர் அர்ஜுனை வேட்பாளராக்க முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அர்ஜுன் அதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் அர்ஜுன் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.