ஆர்யாவை எல்லா கதாநாயகிகளும் விரும்ப என்ன காரணம்? - பா.விஜய் சொல்லும் ரகசியம்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (19:37 IST)
ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, ஸ்வாதி நடித்துள்ள யட்சன் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் இசை. இதன் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது.
 

 
யட்சனின் அனைத்துப் பாடல்களையும் பா.விஜய் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன், யுவன் கூட்டணியில் இவர் பாடல் எழுதும் எட்டாவது படம் இது.
 
விழாவில் பேசிய அவர், ஆர்யாவை ஏன் நடிகைகள் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணத்தை கசியவிட்டார்.
 
"நான், விஷ்ணுவர்தன், யுவன்சங்கர் ராஜா இணைந்து பணிபுரியும் 8–வது படம் இது. இந்த படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லா பெண்களும், எல்லா கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை அது ஏன் என்று எனக்குத் தெரியாது. இப்போது புரிகிறது. 
 
நட்புக்கு அவர் அவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாக பழகுவார். அதனால் தான் அனைவரும் அவரை விரும்புகிறார்கள்."
 
- இவ்வாறு அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்