தளபதி 64’ படக்குழுவினர்களை ஏமாற்றினாரா விஜய்சேதுபதி? அதிர்ச்சித் தகவல்

புதன், 25 டிசம்பர் 2019 (22:01 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக் கொண்ட விஜய், தற்போது குடும்பத்தினருடன் லண்டன் சென்றிருப்பதாகவும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடிய பின்னர் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்ப உள்ளதாகவும், அதனை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஒரு ஒரு காட்சி கூட படமாக்கப்படவில்லை என்றும் அதற்கு விஜய் சேதுபதி கால்ஷீட் தராமல் இழுத்தடித்ததுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது நவம்பர் இறுதி முதல் ஜனவரி இறுதி வரை நடித்துக் கொடுப்பதாக அவர் வாக்குறுதி கொடுத்திருந்தார் என்றும், ஆனால் பல்வேறு படங்களில் அவர் நடிக்கும் கமிட்மெண்ட் இருந்ததால் டிசம்பர் தற்போது அவர் கால்ஷீட் தரவில்லை என்றும் தற்போது தான் அவர் இந்த படத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் தொடர்ச்சியாக ஜனவரி இறுதிவரை அவர் இந்தப் படத்திற்காக தேதிகளை ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து டிசம்பர் மற்றும் ஜனவரி முழுவதும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும் பிப்ரவரி மத்தியில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்