காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி அந்த பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வலியுறுத்தியும் நடிகர் சங்கம் வரும் 8ஆம் தேதி அறப்போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் சங்கம், 'நடிகர் சங்கத்தின் கண்டன அறவழி போராட்டம் நடத்த 8.4.18 ஞாயிறு அன்று காலை 9மணி முதல் 6மணி தான் போலீஸ் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை தான் போலீஸ் அனுமதி கிடைக்க பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது