சின்மயி நீக்கம் ஏன்? டப்பிங் யூனியன் விளக்கம்

திங்கள், 19 நவம்பர் 2018 (12:06 IST)
பின்னணி பாடகி சின்மயி நேற்று திடீரென  டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 
 
வைரமுத்து விவகாரம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக   புகார் எழுந்தது.
 
இந்நிலையில், இதுகுறித்து  தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவர் செல்வராஜ் தனியார் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
" சின்மயி டப்பிங் யூனியன்ல இருந்து நீக்கப்பட்டது உண்மைதான். அதற்கு சின்மயி சொல்றமாதிரி வருடா வருடம் யூனியன் உறுப்பினர்கள் யுனியனுக்கு செலுத்த வேண்டிய சந்தாவை இரண்டு வருஷமா கட்ட தவறியதுதான் காரணம்.
 
அதுமட்டுமில்லாமல், அவர் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் 'தமிழ் நாடு டப்பிங் யூனியலில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது' என்று யூனியன் நிர்வாகத்தை எதிர்த்துப் பேசியுள்ளார்.
 
இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதற்கும் அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்தே உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டார்.
 
எந்த உறுப்பினருக்கும் சந்தா கட்ட நினைவூட்டும் வழக்கம் யூனியனில் இருந்ததேயில்லை. ஜனவரி 31ம் தேதிக்குள் புது வருடத்துக்கான சந்தாவைக் கட்டியாக வேண்டும் என்று உறுப்பினர் அட்டையிலேயே போடப்பட்டிருக்கும்" என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்