நடிகர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்நிலையில், தனுஷ் ஏன் ராஜ்கிரணை ஹீரோவாக்கினார் என்பதற்கு கோடம்பாக்கத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது 25 வருடங்களுக்கு முன்பு, ராஜ்கிராணின் தயாரிப்பில் உருவான படம்தான் ‘என் ராசாவின் மனசிலே’. தனுஷின் அப்பா கஸ்தூரிராஜாவை, ராஜ்கிரண் இப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், அவரே அப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே, தனுஷ் தான் முதலில் இயக்கும் படத்தில் ராஜ்கிரணை ஹீரோவாக்கியுள்ளார் என்றும், அவருக்காகவே அந்த கதை உருவாக்கப்படது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.