நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் பணிகளில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.
இதனால், தற்போது இந்தியன் -2 படத்தில் வேகமாக நடித்துக்கொடுத்துவிட கமல் முடிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றொரு நாயகி வேடத்துக்கு நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கிடையே 'இந்தியன் -2 படம்' தான் தனது கடைசிப்படம் என்று கமல் அறிவித்தாலும், அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபடும் என்று தெளிவுபடுத்தினார்.