விஜய் 65 படத்தில் நடிக்கும் சிம்புவின் நெருங்கிய நண்பர்!

திங்கள், 3 மே 2021 (16:48 IST)
விஜய் 65 படத்தில் விடிவி கணேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் விடிவி கணேஷ். ஆனால் அதற்கு முன்னர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயாவில் அவர் நடித்த வேடம் அனைவருக்கும் பிடிக்க ஒரு கட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதில் ஒரு சிறு தேக்கம் இருந்தது.

இந்நிலையில் இப்போது அவர் விஜய் 65 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். விஜய் 65 படத்தை நெல்சன் இயக்க, பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்