உன்னை அடைந்ததால் ஆசிர்வதிக்கப்பட்டேன்: சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

சனி, 10 மார்ச் 2018 (18:17 IST)
சன் மியூசிக் புகழ் அஞ்சனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது செல்ல உச்சரிப்பு அனைவரையும் கவர்ந்திழுக்கும். அவரது நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று அவர் தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமான டுவிட்டர் பயனாளிகள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அஞ்சனா தனது திருமண நாள் குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:  மகிழ்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கடந்து சென்று விட்டன. மகிழ்ச்சி, சண்டை, ஆகிய இரண்டுமே நமக்குள் ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட அன்புடன் இருந்தது. இதேபோல மகிழ்ச்சியான ஆண்டுகள் பல ஆண்டுகள் வரவேண்டும். மிக அழகான நீண்ட கால வாழ்க்கை நமக்கு இன்னும் உள்ளது என்பது எனக்குத் தெரியும். உன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அஞ்சனாவின் கணவர் 'கயல்' சந்திரன் என்பது தெரிந்ததே. இருவரும் காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்