சர்வதேச தரத்தில் 'விவேகம்' டைட்டில் டிராக்: விக்னேஷ் சிவன் ஆச்சர்யம்

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (07:55 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் இந்த படத்தை மிக ஆவலுடன் முதல் நாள் முதல் காட்சியை காண ஆவலுடன் உள்ளனர்.



 
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில், 'விவேகம்' படத்தின் டைட்டில் டிராக்கை கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. உண்மையிலேயே சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது. அனிருத்துக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்
 
'விவேகம்' படத்தில் இதுவரை இல்லாத வகையில் அனிருத் முதல்முறையாக பின்னணி இசையில் கலக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே அஜித் ரசிகர்களுக்கு வரும் 24ஆம் தேதி முதல் மிகப்பெரிய விருந்து காத்திருக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்