3 நாட்களில் ரூ.100 கோடி: நெகட்டிவ் விமர்சனங்கள் வேஸ்ட் ஆயிருச்சே!

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (06:59 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் திரைக்கதை சுமாராக இருந்தாலும் ஹாலிவுட் தரத்தில் ஒரு நல்ல முயற்சி. தொழில்நுட்ப ரீதியாக மிரட்டியுள்ள இந்த படத்தில் அஜித்தின் உழைப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.



 
 
ஆனால் அஜித்தை பிடிக்காத ஒருசிலர் மற்றும் சில ஊடகங்கள் வேண்டுமென்றே படத்தில் உள்ள நல்ல விஷயங்களை கூறாமல் நெகட்டிவ் விஷயங்களை மட்டும் விளம்பரம் செய்தன.
 
எந்த படத்திற்கும் இல்லாத வகையில் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்றே கருதப்பட்டது. ஆனால் உண்மையில் பீனிக்ஸ் பறவை போல நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகம் குவித்த இந்த படம் தற்போது 3 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. கஷ்டப்பட்டு, பிளான் பண்ணி செய்த நெகட்டிவ் ரிசல்ட் எல்லாம் வீணாகப்போச்சே என சில குரல்கள் டுவிட்டரில் கதறி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்