இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விவேகம். இப்படத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வீரம், வேதாளம் ஆகிய படத்திற்கு மூன்றாவது முறையாக அஜீத்தும், சிவாவும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
எனவே, இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வருகிற 24ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நெட்வொர் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. எனவே, படம் வெளியாகி சில மாதம் கழித்து இப்படத்தை சன் டிவியில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.