ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய விவேகம்

திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (13:55 IST)
அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விவேகம் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.120 கோடி வசூல் செய்துள்ளது.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் சிவா- அஜித் கூட்டணி இந்த முறை புது சாதனை படைத்துள்ளது.
 
விவேகம் படம் திரைக்கும் வரும் முன்பே உலகளவில் ரூ.120 கோடி வசூல் செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் விவேகம் படம் குறித்த செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து வருகிறது. இந்நிலையில் விவேகம் படத்தில் டிரைலர் வெளியீடு தேதியை நாளை இயக்குநர் சிவா அறிவிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்