அதிக தொகைக்கு விற்கப்பட்ட அஜித் படம்

செவ்வாய், 13 ஜூன் 2017 (13:10 IST)
அஜித் நடித்துள்ள ‘விவேகம்’, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.


 

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

சிவா – அஜித் கூட்டணியில் இதற்கு முன் வெளியான இரண்டு படங்களும் நல்ல கலெக்ஷன் என்பதால், இந்தப் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர் விநியோகஸ்தர்கள். சென்னை மற்றும் மதுரை ஏரியாக்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்ட நிலையில், கோவை ஏரியா 9 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை எந்தவொரு அஜித் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்