கொல காண்டுல தல ரசிகர்கள்: மரணகாட்டு காட்ட காத்திருக்கும் விஸ்வாசம்; நியூஇயரில் சஸ்பென்ஸ்!!!

சனி, 29 டிசம்பர் 2018 (08:49 IST)
விஸ்வாசம் டிரைலர் குறித்து வெளியான தகவலால் தல ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். டி இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. 
இந்நிலையில் பொங்கலன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் பேட்ட டிரைலர் நேற்று வெளியாகி பட்டி தொட்டியெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் விஸ்வாசம் டிரைலர் குறித்த தகவல் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
 
அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் புத்தாண்டு அன்று விஸ்வாசம் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தல ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்