மனைவி மகனுடன் தீபாவளி கொண்டாடிய விஷ்ணு விஷால்!

சனி, 6 நவம்பர் 2021 (12:39 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
 
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா காட்டாவை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை பிரிந்து மறுமணம் செய்துக்கொண்ட பின்னரும் தன் மகனுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் மகன் ஆர்யன் உடன் தீபாவளி கொண்டாடிய சில அழகிய புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்