பெயர் மாற்றத்துக்கு அமலா பால் காரணம் இல்லையாம்…

வெள்ளி, 16 ஜூன் 2017 (12:00 IST)
அமலா பால் டீச்சராக நடித்துள்ள படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.


 


‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார், மறுபடியும் விஷ்ணு விஷாலை வைத்து இயக்கியுள்ள படம் ‘மின்மினி’. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, காளி வெங்கட் மற்றும் ராம்தாஸ் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். துப்பறியும் போலீஸ் சந்திக்கும் சவால்கள்தான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் போலீஸாக விஷ்ணு விஷாலும், டீச்சராக அமலா பாலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘மின்மினி’ என்ற பெயரை ‘ராட்சசன்’ என மாற்றியுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில், எல்லா பாடல்களும் மாண்டேஜாக கதையை ஒட்டியே வருகிறதாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்