அடுத்த வருடம் இயக்குனராகி விடுவேன்.. துப்பறிவாளன் 2 பற்றி விஷால்!

திங்கள், 16 அக்டோபர் 2023 (10:45 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

பின்னர் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை.

அடுத்தடுத்து விஷால் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த நிலையில் இப்போது ஹரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் மீண்டும் துப்பறிவாளன் 2 பணிகளை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதை சமீபத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ள விஷால் அடுத்த வருடம் நான் இயக்குனராகி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்