இதுவரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களின் டிரைலர்கள், கிளிப்பிங்குகள் ஆகியவற்றை விளம்பர நோக்கம் கருதி சாட்டிலைட் சேனல்களுக்கு இலவசமாக கொடுத்து வந்தது. இந்த டிரைலர்கள் மற்றும் க்ளிப்பிங்கை வைத்து சேனல்கள் ஒருசில நிகழ்ச்சிகளை வழங்கி கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தது வேறு விஷயம்
இதுகுறித்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் விஷால் நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், தயாரிப்பாளர்களே! இனிமேல் உங்கள் படங்களின் டிரைலர்கள், கிளிப்பிங்குகள், பாடல்கள் ஆகியவற்றை எந்தவொரு சேனலுக்கும் இலவசமாக கொடுக்க வேண்டாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பெறுவதற்காக சேனல்களிடம் பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்' என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேனல்களுக்கு விஷால் வைத்த ஆப்பு காரணமாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.