பச்சை குத்திக் கொள்வதில் நடிகைகள்தான் முன்னிலையில் உள்ளனர். த்ரிஷா, நயன்தாரா, ஸ்ருதி, ஜனனி, குஷ்பு என்று ஏறக்குறைய அனைவரும் உடம்பில் ஒரேயொரு பச்சையாவது குத்திக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஸ்ருதி சமீபத்தில் தனது ஐந்தாவது டாட்டூவை உடம்பில் குத்திக் கொண்டார்.
பூலோகம் படத்தில் ஜெயம் ரவியின் படத்தை த்ரிஷா தனது கை, கால், தொடைகளில் டாட்டூ குத்திக் கொள்வது போல் காட்சிகள் உள்ளன. அதேபோல் ஆம்பள படத்தில் விஷால் தனது வலதுபுற தோளில் டாட்டூவுடன் நடிக்கிறார்.