ஹீரோ, வில்லன் இருவருக்குமே இரட்டை வேடம்: பரபரப்பு தகவல்

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:19 IST)
விஷால் நடிக்கும் அடுத்த படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவருமே இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
விஷால் ஹீரோவாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு மார்க் ஆண்டனி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவருமே இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்