’விஷால் 31’ படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு நிறைவு: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

வெள்ளி, 30 ஜூலை 2021 (16:25 IST)
’விஷால் 31’ படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு நிறைவு: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?
விஷால் நடித்து வரும் 31வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் அந்த படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விஷால் நடிப்பில் துபா சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வந்த பெயர் வைக்கப்படாத படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்றுடன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் சென்னையில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்ற நடிகை நடித்து வருகிறார் என்பதும், இவர் ஏற்கனவே ’தேவி 2’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்