ஆபாசப்படம் கேட்டு சிறுமிக்கு மிரட்டல்! – சென்னையில் இளைஞர் கைது!
வெள்ளி, 30 ஜூலை 2021 (13:41 IST)
சென்னையில் சிறுமியிடம் ஆபாசப்படம் கேட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 14 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவருடன் சில நாட்களாக சாட் செய்து வந்த கண்ணன் சிறுமியை ஆபாச படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுள்ளார்.
அதற்கு சிறுமி மறுக்கவே தொடர்ந்து ஆபாச படம் கேட்டு மிரட்டியுள்ளார் கண்ணன். இதுகுறித்து சிறுமி பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.