தள்ளிப் போன விமலின் குலசாமி திரைப்பட ரிலீஸ்… புது தேதி அறிவிப்பு!

சனி, 22 ஏப்ரல் 2023 (09:15 IST)
நடிகர் விமல் நடிக்கும் குலசாமி என்ற படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்று பொறுப்பையும் அவர் ஏற்றுள்ளார். இந்த படத்தை தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சரவண சக்தி இயக்கியுள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இப்போது தள்ளிவைக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் படத்தின் கதாநாயகன் விமல் கலந்துகொள்ளவில்லை. இந்த படத்துக்கு விமல் போதுமான ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அமீர் “பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பிரம்மாண்டமான படங்களுக்கே, நடிகர்கள் ஊர் ஊராக சென்று ப்ரமோஷன் செய்கிறார்கள். இதுதான் இப்போது தமிழ் சினிமாவின் நிலை. ஆனால் இந்த படத்தின் ஹீரோ, இன்று ப்ரமோஷனுக்கு வரவில்லை. அவர்கள் வந்திருக்கவேண்டும் “ எனப் பேசியுள்ளார். அதன் பின்னர் தான் ஏன் வரவில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்தார் விமல்.

இந்நிலையில் இப்போது குலசாமி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகவில்லை.  இந்நிலையில் மே மாதம் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்