விக்ரம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை– இயக்குநர் திட்டவட்டம்

வியாழன், 14 செப்டம்பர் 2017 (15:57 IST)
‘விக்ரம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை’ என அந்தப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.



 
எந்தப் படம் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறதோ, அந்தப் படங்கள் எல்லாம் தீபாவளிக்கு ரிலீஸ் என கொளுத்திப்போட்டு குளிர் காய்கிறார்கள் சிலர். அந்த வரிசையில், விக்ரம் நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’ படமும் இணைந்துள்ளது. சும்மா இருந்த விக்ரமை, விஜய்யுடன் மோதுகிறார் என்று திரி கிள்ளிப்போட, விஜய் – விக்ரம் ரசிகர்கள் இடையே சண்டை ஏற்படும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்