கோவையில் சேஸிங் காட்சி - விக்ரம், பசுபதி நடிக்கிறார்கள்

வியாழன், 27 நவம்பர் 2014 (13:10 IST)
விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கி வரும் 10 எண்றதுக்குள்ள ஒரு ரோடு மூவி. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியவர்கள் தற்போது கோவையில் முகாமிட்டுள்ளனர். கோவை ஷெட்யூல்ட் டிசம்பர் 10 -ஆம் தேதிவரை நடக்க உள்ளது.
கோவையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சேஸிங் காட்சியை தற்போது படமாக்கி வருகிறார் விஜய் மில்டன். விக்ரம், பசுபதி இருவரும் இந்தப் படப்பிடிப்பில் பங்கெடுக்கிறார்கள். சமந்தா ஹீரோயின்.
 
குலால், ரத்த சரித்திரம், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
படம் அடுத்த வருட தொடக்கத்தில் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்