விக்ரம் - பா ரஞ்சித் இணையும் படத்தின் கதை இதுவா?

செவ்வாய், 11 ஜனவரி 2022 (13:03 IST)
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
பா ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் படத்தின் கதை கோலார் தங்க வயலில் உள்ள பிரச்சினைகள் குறித்து கதையம்சம் கொண்டது என்றும் இந்த படம் அதிரடி ஆக்சன் படம் என்றும் முதல் முதலாக விக்ரம் இதுவரை நடித்திராத தங்கவயலில் பணிபுரியும் ஊழியர் ஒருவராக நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஜீவி பிரகாஷ் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்