விக்ரம்மின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு – பப்ஜி படத்தில் அறிமுகமாகும் அர்ஜுமன் !

வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:51 IST)
பொல்லாத உலகில் பயங்கர கேம் எனும் பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. அந்த படத்தில் விக்ரம்மின் மருமகன் அர்ஜுமன் நடிகராக அறிமுகமாகிறார்.

பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pub g) எனும் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கி வருகிறார். இவர் தாத 88 படத்தின் இயக்குனர் ஆவார். இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி ஆகியோருடன் அர்ஜுமன் என்ற புதுமுக நடிகரும் நடித்து வருகிறார். இவர் விக்ரம்மின் தங்கை மகன் ஆவார். இவர் விளம்பரங்களில் நடித்து வரும் மாடல் ஆவார். முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஏற்கனவே விக்ரம் குடும்பத்தில் இருந்து அவரது மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்