பாலா இயக்கத்தில் ‘வர்மா’ - டீசர் வீடியோ

ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (17:13 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ‘வர்மா’ படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

 
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. ஆந்திரா மட்டுமில்லாமல், ஏராளமான தமிழ் ரசிகர்களும் இப்படத்தை ரசித்தனர்.
 
இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை வாங்கிய நடிகர் விக்ரம், இப்படத்தில் தன் மகனை நடிக்க வைத்தார். அவரின் விருப்பத்தின் பேரில் இயக்குனர் பாலா இப்படத்தை இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்