இயக்குநர் சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டில் பகலவன் என்ற படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்தது. முதலில் ஒப்புக்கொண்ட விஜய் கதையில் இருக்கும் அரசியலைப் பார்த்து பின்வாங்கினார். சீமானும் அரசியல், தேர்தல் என்று தொடர்ந்து பிஸியானார். இதற்கு இடையில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது, பிறகு அதுவும் கைவிடப்பட்டது.
விஜய் ஆண்டனி வரிசையாக நல்ல கதைகளாக எடுத்து நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் கேரக்டருக்கும் உடல்வாகுக்கும் பகலவன் கதை மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்தக் கூட்டணி சாத்தியமாகி இருக்கிறது. பகலவன் விஜய் ஆன்டனிக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும் என்கிறார்கள். இன்னொரு முக்கிய தகவல் நடிகர் விஜய் குடியிருந்த வீட்டில்தான் விஜய் ஆண்டனி வசித்து வருகிறாராம்.