ஷங்கரின் கப்பல் - வாழ்த்த வருகிறார்கள் ரஹ்மான், விஜய், விக்ரம்

வியாழன், 20 நவம்பர் 2014 (11:55 IST)
தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படங்கள் தொடர் தோல்வியடைந்ததால் தயாரிப்பு, விநியோகம் இரண்டிலிருந்தும் விலகியிருந்த ஷங்கர் கப்பல் படத்தின் மூலம் மூண்டும் களத்தில் இறங்கினார்.
 
கப்பல் ஷங்கரின் அசிஸ்டெண்ட் கார்த்திக் இயக்கியிருக்கும் சிரிப்புப் படம்.
 
இதன் விநியோக உரிமையை வாங்கிய ஷங்கர் வரும் 22 -ஆம் தேதி சனிக்கிழமை படத்தின் பாடல்களை வெளியிடுகிறார். இந்த விழாவில் பாடல்களை ரஹ்மானும், விஜய்யும் வெளியிடுகிறார்கள். ட்ரெய்லரை விக்ரம்.
 
வைபவ், சோனம் பஜ்வா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்